தனுஷ் உடன் மோதும் அதர்வா? | சிம்பு எடுத்த முடிவு | ரவி மோகன் இயக்கத்தில் நடிப்பது எப்போது : யோகி பாபு பதில் | 100வது நாளில் 'டிராகன்' | நித்திலன் சுவாமிநாதனை அழைத்து பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் | ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திஷா பதானி | பிரதமர் அணிவித்த சால்வை : இளம் பாடகி ஸ்ரீநிதா நெகிழ்ச்சி | மக்கள் மனங்களை வென்ற மாமன் : நடிகர் சூரியின் நெகிழ்ச்சி பேட்டி | மகனுக்காக இணைந்த தனுஷ், ஐஸ்வர்யா : ரஜினியின் நெகிழ்ச்சி பதிவு | கோமாதா என் குலமாதா, பாகுபலி 2, கட்டா குஸ்தி : ஞாயிறு திரைப்படங்கள் |
மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலி ஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ரதன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வரவேற்பைப் பெற்றது.
கடந்த மாதத்தில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தனர். இந்த படம் ரிலீஸ் தள்ளிப் போகிறது என தகவல் பரவியதை தொடர்ந்து இன்று படக்குழுவினரே அதை உறுதிப்படுத்தி உள்ளனர். ‛‛போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதத்தினால் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படம் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியீட்டில் இருந்து தள்ளி போகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.