பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு திரையரங்குகளில் வெளிவந்த இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறி வருகிறது என்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் உதயநிதி, மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் கார் ஒன்றை அன்பளிப்பாக அளித்து அவரை மகிழ்வித்துள்ளார். இதனை போட்டோ உடன் தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதி நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி வெளியிட்ட பதிவு: ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க 'மாமன்னன்'-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ்க்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போது இணையத்தில் இந்த போட்டோ உடன் செய்தியும் வைரலாகி வருகிறது.