இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். ஹிந்தி நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் தலைப்பு மட்டும் அறிவித்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி அன்று இப்படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பு முடிய இன்னும் ஓரிரு மாதம் ஆகும் என்கிறார்கள். அதன்பின் கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் இருப்பதால் இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.