ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சரத்குமார் தற்போது இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் அவர் விதார்த்துடன் இணைந்து நடிக்கும் படம் 'சமரன்'. எம்360டிகிரி ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்தை திருமலை பாலுச்சாமி இயக்குகிறார். மலையாள நடிகர் ஆர். நந்தா வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடிக்கின்றனர். குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், வேத் சங்கர் சுகவனம் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் திருமலை பாலுச்சாமி கூறியதாவது: ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி சஸ்பென்ஸ் கதையே 'சமரன்' படம். சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால் பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. அதை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்களா என்பதுதான் கதை.
முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மணலியில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் அதிரடி காட்சிகள். இது படத்தில் பேசப்படுவதாக இருக்கும்.