ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
கன்னடத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'காந்தாரா' திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய சாதனையைப் படைத்தது. தற்போது 'காந்தாரா' படத்தின் அடுத்த பாகத்தை அதன் முன்னுரை படமாக எடுக்க உள்ளார் அதன் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி. அதற்கான எழுத்து வேலைகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.
இந்நிலையில் ரிஷப் ஷெட்டி, தனது மனைவி, குழந்தைகளுடன், கர்நாடகா மாநிலம், தர்மஸ்தலா மஞ்சுநாதேஷ்வரா, மங்களூர் அருகில் உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி ஆகிய கோவில்களில் குடும்பத்துடன் வழிபாடு நடத்தி உள்ளார். அது பற்றிய புகைப்படங்களை அவரது மனைவி பிரகதி பகிர்ந்துள்ளார். தங்களது குழந்தைகளுக்கு முடி காணிக்கையும் செலுத்தி உள்ளார்கள்.
“சமீபத்தில் நாங்கள் குடும்பத்துடன் தர்மஸ்தலா, குக்கி சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசித்து ஆசி பெற்றோம்,” என பிரகதி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் மஞ்சுநாதேஸ்வரா என அழைக்கப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் கோவில் உள்ளது. கர்நாடகாவின் மங்களூர் அருகில் குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. குமாரமலை என்றழைக்கப்படும் அங்குதான் இந்திரன் மகளான தெய்வானையை முருகன் மணம் புரிந்தார் என்பது ஐதீகம்.