தலைமைச் செயலகம் : வசந்த பாலன் இயக்கும் அரசியல் தொடர் | வாய்ப்பு தேடும் பிரியா ஆனந்த் | கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் படம் | முதன்முறையாக இமான் இசையில் பின்னணி பாடிய மனோ | பாகுபலி 3ம் பாகம் உருவாகும் : உறுதிப்படுத்திய ராஜமவுலி | மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா |
தெலுங்கு நடிகர் அல்லு ரமேஷ்(52) மாரடைப்பால் காலமானார். சிருஜல்லு என்ற படத்தில் நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து மதுரா, வைன்ஸ், வீதி, நெப்போலியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். கடைசியாக அனுகோனி பிரயாணம் என்ற படத்தில் நடித்தார். குணச்சித்ர வேடங்களில் மட்டுமல்லாது, காமெடியாக அதிகம் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். விசாகப்பட்டிணத்தில் வசித்து வந்த இவருக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு, உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.