இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

கிரைம் நாவல்கள் மூலம் கடந்த பல ஆண்டுகளாக புகழ் பெற்ற எழுத்தாளராக இருப்பவர் ராஜேஷ்குமார். 1500க்கும் மேற்பட்ட நாவல்கள், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். அவரது நாவல்கள் சில திரைப்படங்களாகவும், டிவி தொடர்களாகவும் வெளிவந்துள்ளன.
சமீப காலங்களாக கதைத் திருட்டுகள் அதிகம் நடந்து, அவை சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் வெளிவந்த 'அயோத்தி, விடுதலை' ஆகிய படங்களும் அந்த சர்ச்சையில் சிக்கியுள்ளன.
'விடுதலை' படத்தின் பல காட்சிகள், கதாபாத்திரங்கள் ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர்தொட்டி' நாவலின் தாக்கத்தில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அது குறித்து அந்நாவலை எழுதிய பாலமுருகன் அவரது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில் கமெண்ட் பகுதியில் எழுத்தாளர் ராஜேஷ்குமாரும், “என்னுடைய பல நாவல்களின் அஸ்திவாரங்களில் இது போன்ற விதி மீறல் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பார்த்துக் கொண்டே நகர்ந்து விடவேண்டியதுதான். சட்டத்தை நாடினால் நட்டம் நமக்குத்தான்,” என்று தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
எத்தனையெத்தனை படங்களில் ராஜேஷ்குமார் எழுதிய நாவல்களின் காட்சிகள் இடம் பெற்றிருந்தால் அவர் இந்த அளவிற்கு வருத்தப்பட்டு பதிவு செய்திருப்பார்.