தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றிருந்த நடிகை குஷ்பு, அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதோடு கடந்த 2021 சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் குஷ்பு, தற்போது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாஜகவின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் உரிமைக்காக அவரின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது என்று அண்ணாமலை அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
அந்த வாழ்த்துக்கு குஷ்பு பதிலளிக்கையில், தங்களின் ஆதரவு மதிப்பும் எனக்கு என்றும் ஊக்கமாக இருந்து வருகிறது. பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து நான் போராடுவேன். பெண்களுக்கு சமூகத்தில் நல்லதொரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.