சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
தெலுங்கில் வெளியான விஜய்யின் வாரிசுடு படத்தின் வசூலை தனுஷின் சார் படம் 10 நாட்களில் முறியடித்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கடந்தாண்டு தமிழ், தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் வெளியாகி இரண்டு மொழியிலும் தோல்வி அடைந்தது. அதன் பிறகு விஜய் நடித்த வாரிசு படம் வெளியானது. தமிழில் வெற்றி பெற்ற இந்த படம் தெலுங்கில் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்று கூறப்பட்டது. அதோடு விஜய்யின் வாரிசுடு படம் தெலுங்கில் 25-26 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் வாத்தி படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில் தற்போது சார் படத்தை தயாரித்துள்ள சித்தாரா நிறுவனம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பத்து நாட்களில் சார் படம் 30 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, விஜய்யின் வாரிசு தெலுங்கில் வசூலித்த மொத்த வசூலை 10 நாட்களில் தனுஷின் சார் படம் கடந்து சாதனை படைத்திருப்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி கூடிய சீக்கிரமே தனுஷின் இந்த வாத்தி படம் உலக அளவில் 100 கோடி வசூலை எட்டிப் பிடித்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.