‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹிரா'. அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்ய, கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹிரா' படம் கடந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வருகிற மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ‛பஹிரா' படத்தின் டிரெய்லர் ஒன்று கடந்தாண்டு வெளியான நிலையில் இப்போது இரண்டாவது டிரெய்லர் வெளியாகி உள்ளது. சைக்கோ திரில்லர் கதையில் உருவாகி இந்த டிரெய்லருக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.