4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

ஷாருக்கான், தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள 'பதான்' திரைப்படம் இந்தி ,தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான பேஷ்ரம் பாடல் காட்சிகள் கவர்ச்சியாக இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது. இப்படத்தின் டிரைலர் இன்று(ஜன., 10) வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பதான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். முதல்முறையாக இன்னொரு நடிகரின் படத்திற்கான டிரைலரை நடிகர் விஜய் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




