'இந்தியன் 2' தீபாவளிக்கு வெளியிட திட்டம் | கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் | 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது ? | இளையராஜாவை சந்தித்து நன்றி சொன்ன வெற்றிமாறன் | 'பத்து தல' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | விடுதலை படக்குழுவினருக்கு தங்க நாணயம் தந்த வெற்றிமாறன் | பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்குகிறது | முகேஷ் அம்பானி வீட்டு கலாச்சார நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் | பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் மார்கழி திங்கள் | 'பத்து தல'யை தடுமாற வைக்கும் 'விடுதலை' |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்' . இந்த படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ரமோஜிராவ் பிலிம் சிட்டியில் மிகப்பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக தற்போது ஐதராபாத்தில் உள்ளார் ரஜினி.
இந்நிலையில் தன்னுடைய நீண்ட கால நண்பரான முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசியுள்ளார் ரஜினி. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது ஒருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதோடு அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்தும், ஜெயிலர் படத்தின் பணிகள் குறித்தும் சந்திரபாபு நாயுடு ரஜினியிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, அன்பு நண்பர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.