பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட்டுள்ளார்கள். தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் ரூ 199 செலுத்தி படத்தைப் பார்க்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு கட்டணம் செலுத்தாமல் படத்தை ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை படத்தின் பைரசி தரமில்லாத வீடியோவாக வந்து கொண்டிருந்தது. ஓடிடி தளத்தில் பணம் செலுத்தி பார்க்கும் வசதி வந்ததும் 'எச்டி' தரத்துடன் பைரசி வெளியாகிவிட்டது. அதிலிருந்து தங்களுக்குப் பிடித்தமான பல வீடியோக்களை துண்டு துண்டாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அவற்றை படத் தயாரிப்பு நிறுவனங்களோ, அல்லது அமேசான் பிரைம் நிறுவனமோ தடுத்து நிறுத்தாமல் இருப்பது படத்தை தியேட்டர்களில் ஓட்டிக் கொண்டிருக்கும் தியேட்டர்காரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி வெளியீடுகளால் குறைக்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' தியேட்டர்கள் இன்று முதல் மேலும் அதிகரித்துள்ள நிலையில் இப்படி பைரசி வீடியோக்கள் வருவது தியேட்டர் வசூலை பாதிக்கும் என்பது உண்மை.