ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ராம், சுப்பிரமணியபுரம், பருத்திவீரன், பிதாமகன், சண்டைக்கோழி உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்துள்ள கஞ்சா கருப்பு, கடந்த சில வருடங்களாக படத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் நடைபெற்ற ஓங்காரம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அவருடன் தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர் மோகன் ஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கஞ்சா கருப்பு படம் வெற்றி அடையும் என்று பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக இவர் அப்பாடத்தின் ஹீரோயினை தகாத வார்த்தையில் திட்டி பேசினார். இந்த பட இசை வெளியீட்டு விழாவிற்கு வர ஹீரோயின் ஒரு லட்சம் கேட்டதாக கூறினார். அதை கொடுக்க முடியாத காரணத்தினால் இந்த விழாவிற்கு அவர் வரவில்லை என்று கூறிய கஞ்சா கருப்பு சில தகாத வார்த்தைகளையும் குறிப்பிட்டும் பேசினார். மேலும், இந்த விழாவிற்கு வந்திருந்தால் நிறைய பட வாய்ப்பு கிடைத்திருக்கும் அதை அவர் தவற விட்டு விட்டார் என்றார். கஞ்சா கருப்புவின் இந்த மோசமான பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.