தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று மாலை கோவையில் உள்ள எஸ்என்எஸ் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. முன்னதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த நிகழ்ச்சியை காண முதலில் வரும் 1000 பேருக்கு இலவச அனுமதி என்று பதிவிட்டிருந்தார் யுவன். இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு கூடியிருக்கிறார்கள். அதோடு ஆளாளுக்கு முந்திக்கொண்டு ஓடியதால் அங்கிருந்த சுவர் இடிந்து விழுந்து ஒரு பெண் போலீஸ் உள்பட 6 மாணவர்கள் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.