பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

தனுஷ் நடித்துள்ள நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இதையடுத்து சாணிக்காயுதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க போகிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன், நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அக்டோபர் 7ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்த சந்தீப் கிஷான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது தெலுங்கு மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.




