'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி அனைத்திலுமாகச் சேர்த்து 400 கோடி வசூலைக் கடந்த படம். அப்படத்தை தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுகுமார் இயக்கியிருந்தார். அப்படத்தின் வெற்றி அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தது.
நேற்று 'புஷ்பா 2' படத்தின் பூஜை நடைபெற்றது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் பட்ஜெட்டை அதிகமாக்கியுள்ளார்கள். அதில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அடுத்தபடியாக இயக்குனர் சுகுமாரின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இரண்டாம் பாகத்திற்காக அவருடைய சம்பளம் 50 கோடியாம். மேலும், படத்தின் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட பங்கும் அவருக்கு உண்டாம்.
தெலுங்குத் திரையுலகத்தில் 100 கோடியை சம்பளமாகக் கடந்த ஒரே இயக்குனர் ராஜமவுலி. அவருக்கடுத்து 50 கோடிக்கும் அதிகமான சம்பளம் பெறும் இயக்குனராக சுகுமார் உயர்ந்திருக்கிறார் என்கிறது டோலிவுட் வட்டாரம்.




