நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ்த் திரையுலகத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் முக்கியமான ஒரு படமாக 'சிவாஜி' படம் இருக்கிறது. பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்த படம். இன்றுடன் இப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2007ம் ஆண்டு ஜுன் மாதம் 15ம் தேதி இப்படம் வெளிவந்தது.
“ச்சும்மா அதிருதுல்ல” என்று ரஜினிகாந்த் பேசிய வசனம் இன்றும் பலர் நிஜ வாழ்க்கையில் பேசும் ஒரு வசனமாக உள்ளது. அந்த அளவிற்கு இப்படத்தின் வெற்றி திரையுலகத்தையே அதிர வைத்தது. இந்தப் படம்தான் தமிழ் சினிமாவை உலக அரங்கில் இன்னும் அதிகமாகப் பரவச் செய்தது. அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் படத்திற்கு முதன் முதலில் கிடைத்த அதிக வரவேற்பு இந்தப் படத்தில் இருந்துதான் ஆரம்பமானது.
ஒரு பக்கா கமர்ஷியல் படமாக உருவான இப்படத்தில் நடிப்பு, பிரம்மாண்டம், சென்டிமென்ட், சிறப்பான பாடல்கள் என அனைத்தும சிறப்பாக அமைந்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. பாடல் காட்சிகளுக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கங்கள் அதில் ரஜினிகாந்த், ஸ்ரேயாவின் நடனம் ஆகியவை இன்றும் வசீகரமானவை.
இடைவேளைக்குப் பின் ரஜினிகாந்த் 'மொட்ட பாஸ்' ஆக வந்து ஒரு அதிரடி ஆட்டமே ஆடியிருப்பார். அவருக்கும் வில்லன் சுமனுக்குமான காட்சிகளில் அனல் பறந்தன. ரஜினி, ஸ்ரேயாவின் ரொமான்ஸ் காட்சிகள், ரஜினி, விவேக்கின் காமெடி காட்சிகள், ரஜினி, மணிவண்ணன், வடிவுக்கரசியின் சென்டிமென்ட் காட்சிகள் அனைத்துவிதமான ரசிகர்களையும் கவர்ந்தவையாக இருந்தன.
எத்தனையோ படங்களுக்கு இரண்டாம் பாகம் வருகிறது. இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் வந்தால் அது ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்.