'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
இனிகோ பிரபாகர், யோகி பாபு, வேதிகா, மீனாட்சி தீக்ஷித், பிரதாப் போத்தன், மொட்டை ராஜேந்திரன் நடித்து வந்த படம் வீரப்பனின் கஜானா. இண்டியானா ஜோன்ஸ், நேஷ்னல் டிரஸ்சர் போன்ற ஹாலிவுட் படங்கள் பாணியில் இது உருவாகிறது. காட்டுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு புதையலை தேடிச் செல்லும் கதை.
இதில் வேதிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை நடனத்திற்காக பாராட்டு பெற்ற வேதிகா, இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் அவதாரம் எடுத்திருப்பதோடு பல சாகச காட்சிகளிலும் நடித்திருக்கிறார். வேதிகாவுடன் மீனாக்ஷி தீக்ஷித்தும் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.
இந்த படத்திற்கு வீரப்பனின் கஜானா என்று பெயர் வைக்கப்பட்டதற்கும், அவரது படத்தை பயன்படுத்துவதற்கும் வீரப்பன் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காட்டுக்குள் வீரப்பன் ஒரு கஜானாவை மறைத்து வைத்திப்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்த தலைப்பு ஏற்படுத்துகிறது. என்று அவர்கள் கூறினார். இந்த நிலையில் டைட்டிலில் இருந்து வீரப்பன் பெயரை நீக்கி விட்டதாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது.