குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பூர்ணா எனும் சாம்னா கசிம். அந்தப் பட இசை வெளியீட்டு விழாவின் போது பார்க்க அசின் போலவே இருக்கிறார் என நடிகர் விஜய்யால் பாராட்டப்பட்டவர். அதன் பின் நிறைய மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். பல டிவி ஷோக்களில் நடுவராகப் பங்கேற்றிருக்கிறார்.
பூர்ணா தனது வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்தி உள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, “குடும்பத்தினரது ஆசீயுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அதிகாரப்பூர்வமாக,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பூர்ணா திருமணம் செய்ய இருக்கும் நபர் பெயர் சானித் ஆசிப் அலி. துபாயில் தொழிலதிபராக உள்ளார். தற்போது இருவீட்டாரது சம்மதத்துடன் நிச்சயம் நடந்துள்ளது.
மலையாளத்திலிருந்து வந்து இங்கு நம்பர் 1 நடிகையாக உள்ள நயன்தாரா திருமண அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் பூர்ணா அவரது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.