மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் கல்லூரி விழாவில் பாடிக்கொண்டிருந்த போது பிரபல பாடகர் கே.கே. காலமானார். பிரபல பின்னணி பாடகர் கே.கே.,என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னாத் 53 . டில்லியைச் சேர்ந்த இவர் , தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்க்கிள்ஸ் (Jingles) எனப்படும் விளம்பர பாடல்களை பாடி புகழ் பெற்றவர் .
தமிழில் இவரது பாடல்கள் தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், காதல் தேசம் திரைப்படத்தில் "கல்லூரிச் சாலை" மற்றும் "ஹலோ டாக்டர்" பாடல்களை பாடும் வாய்ப்பை வழங்கினார். 90'S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பல பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் கே.கே! மின்சார கனவு திரைப்படத்தில் 'ஸ்டராபெர்ரி கண்ணே', உயிரோடு உயிராக திரைப்படத்தில் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்', செல்லமே திரைப்படத்தில் 'காதலிக்கும் ஆசையில்லை', காக்க காக்க திரைப்படத்தில் 'உயிரின் உயிரே', 7ஜி ரெயின்போ காலனியில் 'நினைத்து நினைத்து பார்த்தேன்', காவலன் திரைப்படத்தில் 'பட்டாம்பூச்சி கூப்பிடும் போது', மன்மதன் திரைப்படத்தில் 'காதல் வளர்த்தேன்' உள்ளிட்ட பல்வேறு காதல் பாடல்களுக்கு இவரின் குரலே உயிர் கொடுத்தது.
![]() |
![]() |