செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ராம்குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான படம் ராட்சசன். இப்படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் ‛மின்மினி' என்ற படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள்.
சில்லுக்கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கியவர் ஹலிதா சமீம். இவர் ஏற்கனவே மின்மினி என்ற படத்தின் முதல் பாதியை இயக்கி உள்ளார். பீரியட் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள், இளைஞர்களாக வளரும் வரை காத்திருந்து ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாதியை இயக்கப் போகிறார் ஹலிதா சமீம். இந்த இரண்டாம் பாதையில்தான் விஷ்ணு விஷாலும், அமலாபாலும் சிறப்பு தோற்றத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள்.