இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி அதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
ஒரு நாட்டுப்பற்று மிக்க படம் என்றும், இந்திய ராணுவம் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்தான் இந்த படத்தின் மைய கதை என்றும் கூறப்படுகிறது . இதற்காக மத்திய அரசிடம் சில முன் அனுமதி வாங்கும் பணி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும், அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் முதல் பான் - இந்திய திரைப்படம் இதுதான் என்று கூறப்படுது.
இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணையவுள்ளனர் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்தடுத்து இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது .