இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தென்னிந்திய அளவில் மிக பிரம்மாண்டமான இயக்குனர்கள் பெயர் எடுத்தவர்கள் இயக்குனர் ஷங்கரும், ராஜமவுலியும். சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கரே, ராஜமவுலியை 'மகா ராஜமவுலி' என்று பாராட்டியிருந்தார்.. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா என்கிற பான் இந்தியா படத்தை இயக்கிய சுகுமாரும் இந்தப்படத்தை பார்த்துவிட்டு தற்போது இயக்குனர் ராஜமவுலி. குறித்த பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனர் சுகுமார் இதுபற்றி கூறும்போது, “நாங்கள் எல்லோரும் உங்களுக்கு அருகிலேயே இருந்தாலும் கூட உங்களை தொடுவதற்கு ஒட வேண்டியிருக்கிறது. நாங்கள் அனைவரும் ஆகாயத்தில் இருந்தாலும் கூட அங்கிருந்தபடியே உங்களை அண்ணாந்து தான் பார்க்க வேண்டி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், “புஷ்பா படத்தை நான் பான் இந்தியா படமாக உருவாக்கவில்லை.. ஆனால் இயக்குனர் ராஜமவுலி அதை திட்டமிட்டே பான் இந்தியா படமாக உருவாக்கியுள்ளார். அவருக்கும் எங்களுக்கும் ஒரே வித்தியாசம் தான் இருக்கிறது. அவர் இதுபோன்ற பிரமாண்ட படைப்புகளை உருவாக்குவார் எங்களால் அவற்றை பார்க்க மட்டும் தான் முடியும்” என்று கூறியுள்ளார்