பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
நாயகியின் தோழி, நாயகனின் தங்கை வேடங்களில் நடித்து வந்தவர் அம்மு அபிராமி. ராட்சசன், துப்பாக்கி முனை படங்களில் சிறுமியாக நடித்து புகழ்பெற்றார். அசுரன் படத்தில் தனுசுசின் பிளாஷ்பேக் காதலியாக நடித்திருந்தார். தற்போது அவர் நடித்துள்ள யானை, கண்ணகி, நிறங்கள் மூன்று, கனவு மெய்ப்பட, யார் இவர்கள் உள்ளிட்ட படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது.
இந்த நிலையில் போகாதே என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும் சி சத்யா, முதன்முறையாக இந்த இசை ஆல்பத்துக்கு இசை அமைத்துள்ளார்.
இயற்கையின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தி அன்பை விதைக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளது. 2021ம் ஆண்டு வெளியான தீதும் நன்றும் திரைப்படத்தை இயக்கிய ராசு ரஞ்சித் இயக்கியுள்ளார்.
லாவரதன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பிரபல இந்தி பாடகரும் சல்மான் கான் நடித்த ரேஸ் 3 படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருமான ஷிவாய் வியாஸ் பாடியுள்ளார். அம்மு அபிராமியின் பிறந்த நாளான நேற்று (மார்ச் 16) இந்த ஆல்பம் வெளியிடப்பட்டது.