‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த படம் ' கோர்ட் - ஸ்டேட் vs நோ படி '. குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் பலமடங்கு வசூலைக் குவித்தது.
ஏற்கனவே இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்த்தின் அப்பா தியாகராஜன் வாங்கியுள்ளார். இந்த படத்தை தமிழில் தியாகராஜன் இயக்குகிறார். இந்த படத்தில் பிரியதர்ஷி கதாபாத்திரத்தில் பிரசாந்த் மற்ற முதன்மை கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் க்ரித்திக் மற்றும் ராஜகுமாரன், தேவயானி தம்பதியினரின் மகள் இனியா என இருவரும் நடிக்கின்றனர். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் என இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.