தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் சண்டை காட்சிகளும், பைக் சாகச காட்சிகளும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்றன. இந்தப்படத்தின் சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் மாஸ்டர் வடிவமைத்திருந்தார்.
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்கு முன்னதாக வில்லன் கார்த்திகேயா, அஜித்தின் குடும்ப உறுப்பினர்களை இரும்பு வடங்களில் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டு, ரிமோட்டின் மூலமாக இயக்கி அவர்களை கீழே விழ செய்வது போல போக்கு காட்டி அஜித்தை பயமுறுத்துவார்.
இந்தநிலையில் தற்போது இந்த காட்சி 2004ல் ஜாக்கிசான் நடிப்பில் வெளியான நியூ போலீஸ் ஸ்டோரி படத்தில் இருந்து 'தழுவி' எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஜாக்கி சானுக்கும் இதேபோன்ற அனுபவம் தான் அந்தப்படத்தில் நடக்கிறது. இந்த இரண்டு சண்டை காட்சிகளையும் ஒப்பிட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.