'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” |
கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. கடந்த ஆண்டு போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. டாக்டர் ஒருவரை ரகசிய திருமணம் செய்த சஞ்சனா கல்ராணி தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் கன்னட சினிமாவின் பிரபல ஆடை அலங்கார நிபுணர் பிரசாத் பிட்டப்பாவின் மகன் ஆடம் பிட்டப்பா தனக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ்கள் அனுப்புவதாக பெங்களூரு இந்திரா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசார் ஆடம் பிட்டப்பாவை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக சஞ்சனா கல்ராணி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் அவர் (ஆடம் பிட்டப்பா) எனக்கு அந்த செய்திகளை அனுப்பியபோது முற்றிலும் குடிபோதையில் இருந்தார். இந்தச் செய்திகள் தவறானவை, மிருகத்தனமானவை, அருவருப்பானவை, மலிவானவை, புண்படுத்தக்கூடியவை, மிக மிக அவமதிப்பவை, மேலும் கடந்த வாரத்தில் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன.
உங்கள் அனைவருக்கும் தெரியும், நான் ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறேன், மேலும் என் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் எதிலும் ஈடுபடுவதைத் தவிர்த்து வருகிறேன். ஆனால் நான் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு வேறு வழியின்றி இழுக்கப்படுகிறேன்.
நான் யாருடைய வாழ்க்கையிலும் ஊடுருவப் போவதில்லை, ஆனால் யாரேனும் இந்த மாதிரியான கவனச்சிதறலை என் வாழ்க்கையில் ஏற்படுத்தினால் தப்பிக்க முடியாது, சட்டரீதியான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எந்த ஆதாரமும் இல்லாமல் என்னையும் என் குடும்பத்தையும் அவதூறு செய்யும் வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப மாட்டார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சஞ்சனா கல்ராணி கூறியுள்ளார்.