விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

ஹிந்தியில் வெற்றி பெற்ற அந்தாதூன் படம் தமிழில் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. இவரது அப்பா தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். நாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சிம்ரன், சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் தாணு பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரஷாந்த் நடிப்பில் வண்ண வண்ண பூக்கள் படத்தை தயாரித்து, வெளியிட்ட தாணு, 30 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்தின் அந்தகன் படத்தை வெளியிடுகிறார். இம்மாதம் இறுதியில் பட வெளியாக வாய்ப்புள்ளது.




