தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி : பாலிவுட் அதிர்ச்சி | மேடையில் கண்கலங்கிய ஐஸ்வர்ய லட்சுமி | ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை | சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | குந்தவையாக த்ரிஷா : வெள்ளியன்று பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை |
தமிழ் சினிமா நடிகையான ரம்யா பாண்டியன் தனது ஹாட்டான புகைப்படங்களால் பெரிய அளவில் டிரெண்டிங் ஆனார். போட்டோஷூட் மூலம் அவருக்கு கிடைத்த புகழ் வெளிச்சத்தை பார்த்த பல நடிகைகளும் தொடர்ந்து அவரை போலவே ஹாட்டான புகைப்படங்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகை சாந்தினி தமிழரசனும் இணைந்துள்ளார்.
சாந்தினி தற்போது ரம்யா பாண்டியன் ஸ்டைலில் மொட்டை மாடியில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்க்கும் சிலர் 'சாந்தினி இவ்வளவு கவர்ச்சியாக போஸ் கொடுப்பாரா?' என கேள்வி கேட்டு வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு சித்து+2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாந்தினி, தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்கள் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா தொடரில் நடித்து வருகிறார்.