சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
பிரபல சீன இயக்குனர் சோர்யுவான். ஜாக்கி சானின் ஆஸ்தான இயக்குனர். அவரது பல படங்களை இயக்கியவர். அவருடன் பல படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். குறிப்பாக போலீஸ் ஸ்டோரியில் ஜாக்கி சானுக்கு இணையான கேரக்டரில் நடித்திருந்தார்.
87 வயதான சோர்யுவான் முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனை அவரது குடும்பத்தினர் தற்போது அறிவித்துள்ளனர். சோர்யுவானுக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஹாங்காங்கை சேர்ந்த சோர்யுவான் 120க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 40 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் மற்றும் 70 படங்களுக்கும் மேல் திரைக்கதை எழுதியுள்ளார்.
சோர்யுவான் மறைவுக்கு ஜாக்கிசான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: சோர்யுவானின் மறைவு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் ஸ்டோரி படங்களில் அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவர் எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதை நான் கடைபிடித்து வருகிறேன். கடந்த காலத்தை விட எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று அவர் அடிக்கடி கூறுவார். அவரது அறிவுரையோடு அவரது நினைவையும் சுமந்து வாழ்வேன். அவர் உருவாக்கிய அவரது சீடர்களில் ஒருவனாக நான் இருப்பேன். அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.