பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்., 24ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.
தினமலருக்கு ஹூமா குரேஷி அளித்த பேட்டி : ‛‛வலிமை படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். எனக்கு பைக் மிகவும் பிடிக்கும், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பைக் சாகச காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும். வசனங்கள் பேச இயக்குனர் வினோத் உதவினார். அதேப்போன்று படப்பிடிப்பு தளத்திலும் அஜித் உதவினார். முதல்நாளே அவருடன் நடிக்க சுலபமாக இருந்தது. இந்த படத்தில் அஜித் உடன் டூயட் பாடாதது, வருத்தமாக உள்ளது. காலா படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தேன். இயக்குனர்கள் வாய்ப்பு தந்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க நான் தயாராக உள்ளேன். தமிழ், ஹிந்தி படங்கள் இரண்டில் நடிப்பதற்கு வித்தியாசம் தெரியவில்லை. எந்த மொழியிலும் நடிப்பு மட்டுமே பேசும்'' என்றார்.