என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

மாநாடு படத்தையடுத்து அசோக் செல்வன் நடிப்பில் மன்மதலீலை என்ற படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு, அதையடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவை  நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடித்த பிறகு  நாகசைதன்யாவுடன்  2014 ல் தெலுங்கில் ஒக்க லைலா கோசம் என்ற படத்தில்தான் அவர்  அறிமுகமானார். இப்போது மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார். 
விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெலுங்கில் சிரஞ்சீவியுடன்  ஆச்சார்யா, பிரபாஸுடன் ராதேஷ்யாம் போன்ற  படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். இது தவிர, தற்போது இந்தி, தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            