புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' |
திரைத் துறையில் நடிப்பு மற்றும் தயாரிப்பில் பயணித்து வந்த நடிகை நயன்தாரா, தற்போது அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட துவங்கி உள்ளார். இதற்காக அவர், 'தி லிப் பாம்' நிறுவனத்துடன் இணைந்து உள்ளார்.
இது குறித்து, நயன்தாரா தரப்பு அறிக்கை: தோல் மருத்துவர் ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து, அழகு சாதன பொருட்கள் உலகில், புதிய பிராண்டை அறிமுகம் செய்வதன் வாயிலாக, புதிய அத்தியாயத்தை நயன்தாரா துவக்கி உள்ளார். தான் பயன்படுத்தும் சொந்த சரும பராமரிப்பு பொருட்களின், சிறப்பான செயல்திறன், உயர்பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில், இந்நிறுவனத்துடன் அவர் கைகோர்த்து உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், கீர்த்தி சுரேஷ் இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும்; சமந்தா, காஜல் உள்ளிட்டோர் ஓட்டல், ஜவுளி உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்து உள்ளார்.