பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிற படம் பேச்சுலர். வருகிற டிசம்பர் 3ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருப்பவர் திவ்ய பாரதி. இவர்களுடன் முனீஸ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கு இசையமைக்க, சித்துக்குமார் பின்னணி இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பேசிய நாயகி திவ்யபாரதி உணர்ச்சி வசப்பட்டு மேடையில் அழுதார். அவர் பேசியதாவது: இரண்டு வருடங்களாக நாங்கள் இந்த ஒரு வெற்றிக்காக தான் கஷ்டப்பட்டோம். இதில் பணியாற்றிய அனைவருமே படத்தின் தூண்களாக அமைந்திருக்கின்றனர். எனக்கு இது முதல் படம் என்பதால் தெரியாத நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தனர்.
தயாரிப்பாளர் நினைத்திருந்தால், பிரபலமாக இருக்கிற நாயகியை தேர்ந்தெடுக்கலாம். அது படத்துக்கு இன்னும் அதிக விளம்பரத்தை தந்திருக்கும், எனினும் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருந்தார். இத்திரைப்படத்தில் கமிட் ஆனதில் இருந்தே நான் ரெகுலராக வொர்க் ஷாப்புக்கு சென்றேன். பட அலுவலகம் சென்று, படத்தைப் பற்றிய பேச்சுகளில் ஈடுபட்டேன். முதலில் ஷீட் செய்ய்யும்போது நான் பயந்துவிட்டேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. க்ளைமாக்ஸ் எல்லாம் என்னால் பண்ண முடியாது என நான் அழுதுவிட்டேன் இயக்குநர் சதீஷ்தான் ஆறுதல் தந்து நடிக்க வைத்தார்.
சில வசனங்களை நான் பேச திணறியபோது ஜிவி பிரகாஷ் எனக்கு சொல்லிக் கொடுத்து ஊக்கப்படுத்தி பேச வைப்பார். என்னுடைய அம்மா தனி ஆளாக எப்போதுமே என்னுடன் இருந்தார். எனக்கு மிகவும் நம்பிக்கையாக இருந்தார். எனக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்து அழைத்து வந்திருக்கிறார். இவ்வாறு பேசினார். தாயை பற்றி பேசும்போது தொடர்ந்து பேச முடியாமல் கண்ணீர் சிந்தினார். அழுதபடியே பேச்சையும் முடித்துக் கொண்டார். இது விழாவுக்கு வந்திருந்தவர்களை நெகிழ வைத்தது.