ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

மறுவெளியீடு என்பது சினிமாவில் அவ்வப்போது நிகழ்கிற ஒன்று. தமிழ் சினிமாவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டது. இதுதவிர கமல், ரஜினி நடித்த சில படங்களும் மறுவெளியீடு செய்யப்பட்டது, பாலிவுட்டில் ஷோலே, முகலே ஆலம் உள்ளிட்ட சில படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டது. இதுபோன்று ஹாலிவுட்டில் பென்ஹர், டென் காமாண்ட் உள்ளிட்ட படங்கள் வெளியானது.
தற்போது தி மேட்ரிக்ஸ் படம் மறு வெளியீடு செய்யப்படுகிறது. இந்த படத்தின் 4வது பாகம் வருகிற டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை புரமோட் செய்யும் பணியின் ஒரு பகுதியாக முதல் பாகத்தை மறுவெளியீடு செய்கிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.
1999ம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் தி மேட்ரிக்ஸ். கேயானு ரீவ்ஸ் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து 2003ம் ஆண்டு தி மேட்ரிக்ஸ் ரீலோடட் என்ற பெயரில் இரண்டாம் பாகமும், அதே ஆண்டின் இறுதியில் தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ் என்ற பெயரில் 3ம் பாகமும் வெளிவந்தது.
தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு தி மேட்ரிக்ஸ் படத்தின் 4வது பாகம் உருவாகியுள்ளது. இதில் கேயானு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்துள்ளனர். வச்சோவ்ஸ்கி சகோதரிகளான லானா மற்றும் லில்லி இயக்கியுள்ளனர். இதன் வெளியீட்டுக்கு முன் தி மேட்ரிக்ஸ் முதல் பாகத்தை வெளியிட வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் டிசம்பர் 3ம் தேதி வெளியாகிறது.




