லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நதியா. தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த நதியா, மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். இன்றும் இளமை தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துள்ளார். இந்நிலையில் 'பூவே பூச்சூடவா' இளமை தோற்றத்தில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நதியா. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.