காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் இந்திய திரையுலகம் மீளவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவைச்சேர்ந்த விஷால், புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர் படிக்க வைத்து வந்த பிள்ளைகளின் கல்வி செலவை இனிமேல் தான் ஏற்றுக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
அதையடுத்து தமிழ் சினிமாவைச்சேர்ந்த இன்னொரு நடிகரான சிவகார்த்திகேயனும் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்டுடியோவிற்கு சென்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்த சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமாரின் மரணத்தை நம்பவே முடியவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருடன் பேசினேன். பெங்களூர் வருபோது சந்திக்குமாறு சொன்னார். ஆனால் நான் இப்போது பெங்களூர் வந்திருக்கிறேன். ஆனால் அவர் இல்லை. அவர் ஒரு திரையிலும், திரைக்கு பின்னாடியும் ஒரு மிகச்சிறந்த நடிகராக மனிதராக வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த ஆன்மா. அவருக்கு மறைவே கிடயாது.
திரையில் மட்டுமின்றி திரைக்கு பின்னரும் அவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மறைவின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் என்னால் வெளியில் வர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதோடு புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ் குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார்.




