டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சமீபத்தில் கேரளா மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண் / பெண்) என்கிற பிரிவில் யாருமே அறிவிக்கப்படவே இல்லை. சிறப்பு ஜூரி விருதில் கூட அவர்கள் இடம்பெறவில்லை. இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் கூறும்போது, இந்த வருடம் நான்கு படங்கள் குழந்தைகளுக்கான பிரிவுகளில் கலந்து கொண்டன. ஆனால் விருதுகளுக்கான அளவுகோல்களை அவை எட்டவில்லை. இதுகுறித்து ஜூரி தெரிவித்த கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று கூறியிருந்தார்.
அதேசமயம் கடந்த வருடத்தில் வெளியான ஒரு படத்தில் கூடவா சிறந்த குழந்தை நட்சத்திரத்தை தேர்வு செய்ய முடியவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக கடந்த வருடம் வெளியான ஸ்தனர்த்தி ஸ்ரீகுட்டன் என்கிற படம் பள்ளி மாணவர்கள் பற்றியும் அவர்களுக்கு வகுப்பறையிலேயே சமமாக அமர வைத்து கல்வி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
குறிப்பாக மாணவர்கள் அனைவரும் ஒருவருக்கு பின் ஒருவராக பெஞ்சுகளில் அதாவது முதல் பெஞ்ச், கடைசி பெஞ்ச் என்கிற பாகுபாடு இன்றி அரை நீள்வட்ட வடிவில் அமர வைக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியது. இது பலரிடம் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. இதுபோன்ற படங்களில் இருந்து வேறு இன்னும் என்ன விருதுக்கான தேர்வு குழுவினர் எதிர்பார்க்கிறார்கள் ? என்று தங்களது விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.