என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாளத்தில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். சில வருடங்களுக்கு முன்பு நடிகையாக அறிமுகமானவர் இன்று மலையாளத் திரையுலகில் நம்பர் ஒன் வசூல் பட கதாநாயகி என்கிற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். லோகா சாப்டர் 1 ; சந்திரா என்கிற வெற்றி படத்தின் கதாநாயகியாக கொண்டாடப்பட்டு வருகிறார். இந்திய அளவில் முதல் சூப்பர் உமன் கதை அம்சம் கொண்ட படமாக கடந்த ஆகஸ்ட் இறுதியில் மலையாளத்தில் வெளியான லோகா திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இதன் அடுத்தடுத்த பாகங்களும் உருவாக இருக்கின்றன. இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றியில் கல்யாணி பிரியதர்ஷன் இந்த அளவுக்கு பேசப்படுவதற்கு ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் அற்புதமான கேமரா கோணங்களும் முக்கிய காரணம் என பல பத்திரிகைகள் பாராட்டின. அதை உறுதிப்படுத்துவது போல படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவிக்கு ஒரு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை லோகா படத்தின் வெற்றிக்காக பரிசளித்துள்ளார்.