ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாள நடிகர்களின் கடந்த மூன்று வருடங்களில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளவர் டொவினோ தாமஸ். தொடர்ந்து நல்ல கதையைம்சம் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். பல ஆக்ஷன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதால் தனது உடம்பை எப்போதுமே கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதுடன் தொடர்ந்து ஜிம்மிற்கு செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் இவர் எங்கு படப்பிடிப்பிற்கு சென்றாலும் இவருக்கு ஒரு விஐபி எப்படியாவது ஜிம் மேட்டாக மாறிவிடுகிறார். இதற்கு முன்னதாக ஐதராபாத்தில் இவரது படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் சில நாட்கள் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து உடற்பயிற்சி மேற்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது பிரபல இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரனுடன் ஒரே ஜிம்மில் இணைந்து உடற்பயிற்சி செய்து வருகிறார் டொவினோ தாமஸ். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள டொவினோ தாமஸ், "வாவ், இன்றைய தினம் உடற்பயிற்சி சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது. ஒன் அண்ட் ஒன்லி ஸ்பின்னர் முத்தையா முரளிதரனை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது" இன்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.