புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் | இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு |
மலையாள திரையுலகை சேர்ந்த இளம் நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகிய இரண்டு நடிகர்கள் மீதும், தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் முறையான ஒத்துழைப்பு தரவில்லை என்கிற புகார்களின் அடிப்படையில் ரெட் கார்டு போடப்பட்டது. அதேசமயம் அவர்கள் ஏற்கனவே நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றும், போஸ்ட் புரொடக்சன் பணிகளில் ஈடுபடலாம் என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் நடிகர் ஷேன் நிகம் நடித்துள்ள ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து ஷேன் நிகம் தனது தவறுகளுக்கு பொறுப்பேற்று தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக அல்லாத ஸ்ரீநாத் பாஷியும் இதேபோன்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். இதையடுத்து இவர்கள் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இவர்கள் புதிய படங்களில் நடிக்கலாம் என்றாலும் தயாரிப்பாளர்கள் தங்களது சொந்த ரிஸ்க்கில் தான் இவர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டுமே தவிர இவர்கள் குறித்து ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கு நடிகர் சங்கமோ தயாரிப்பாளர் சங்கமோ பொறுப்பேற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.