மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... |

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான படம் 'ஒருத்தீ'. நடிகை நவ்யா நாயர் ஒரு மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடித்துள்ளார். இவர் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ஒருத்தீ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது அதில் விநாயகனிடம் மீ டூ குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மீ டூ என்றால் என்ன என்று பதில் கேள்வி எழுப்பிய விநாயகன், மேலும் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொண்டவர்கள் இங்கு யாராவது இருக்கிறீர்களா, நான் இதுவரை பத்து பேருடன் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளேன். ஆனால் அவர்களின் அனுமதி பெற்ற தான் அதை செய்தேன்.. எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால் அவரிடம் நேரடியாகவே இதுபற்றி கேட்டு விடுவேன்.. அவர்களுக்கு விருப்பமில்லை என்றால் அதை அவர்கள் உடனே நோ சொல்லி விடலாமே என்று கூட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்தபடி கேள்வி எழுப்பினார். அவரது இந்த பேச்சு நிருபர்களை, குறிப்பாக அங்கே அமர்ந்திருந்த ஒரு பெண் நிருபரை ரொம்பவே சங்கடப்படுத்தியது..
இந்த விஷயம் பத்திரிக்கையாளர்கள் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.. இதைத்தொடர்ந்து தற்போது, தான் எந்த ஒரு உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு இப்படி பேசவில்லை என்றும், அந்த பெண் பத்திரிகையாளருக்கு நான் பேசியதன் மூலம் ஏதாவது சங்கடம் ஏற்பட்டு இருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் விநாயகன்.