'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

பாலிவுட்டின் பிரபல நடிகர் கோவிந்தா, 61. ஆக் ஷன், காமெடி என பலவிதமான படங்களில் ஹீரோவாக நடித்து 90களில் ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக இவரின் நடனத்திற்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில் இவர் திடீரென நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மும்பையின் ஜுஹு கடற்கரை பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார் கோவிந்தா. நேற்று இரவு தனது வீட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து மும்பையில் உள்ள கிரிட்டிகேர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக பல்வேறு விதமான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தீராத தலைவலி மற்றும் தலைசுற்றல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது அவர் நலமாகி உள்ளார். இன்று மாலை அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
முன்னதாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்த கோவிந்தா, ‛‛அதிகமான உடற்பயிற்சி காரணமாக உடலில் ஏற்பட்ட சோர்வால் இது நிகழ்ந்தது. தற்போது நான் நலமாக இருக்கிறேன்'' என்றார்.




