2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர ஜோடி ரன்வீர் சிங், தீபிகா படுகோனே. இருவரும் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'துவா' எனப் பெயர் வைத்ததாக பின்னர் தெரிவித்தார்கள்.
சினிமா பிரபலங்கள் யாரும் சீக்கிரத்தில் அவர்களது குழந்தைகளை வெளி உலகத்திற்கு காண்பிப்பதில்லை. பிரைவசி காரணமாக அவற்றைத் தவிர்த்து வருவார்கள்.
மகாராஷ்டிராவில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு தீபிகா, ரன்வீர் தம்பதியினர் தங்களது குழந்தையை நேற்று அறிமுகப்படுத்தி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சில புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டனர். அந்தப் பதிவிற்கு பத்து மணி நேரத்திலேயே ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக 'ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி' ஆகிய தெலுங்குப் படங்களிலிருந்து தீபிகா நீக்கப்பட்டது சர்ச்சையானது. இருந்தாலும் தீபிகா மீது இவ்வளவு பேர் அன்பாக இருந்து லைக் கொடுத்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தீபிகா தற்போது அட்லி - அல்லு அர்ஜுன் படத்திலும், ஷாரூக் ஜோடியாக 'கிங்' படத்திலும் நடித்து வருகிறார். ரன்வீர் சிங் 'துரந்தர்' படத்தில் நடிக்க உள்ளார்.