தீபாவளி போட்டியில் 'காந்தா' ? | 14 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் ‛உருமி' இரண்டாம் பாகம் | விருஷபா டப்பிங்கை முடித்த மோகன்லால் | ஜப்பானிய பாரம்பரிய உடை அணிந்து ஜப்பான் சாலைகளில் வலம் வந்த மஞ்சு வாரியர் | முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்வதி | ஒரே நேரத்தில் ரஜினி விஜய் படங்களில் நடித்த இரட்டிப்பு சந்தோஷத்தில் மோனிஷா பிளஸ்சி | விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகம் வசூலித்த படம் 'கல்கி 2898 எடி'. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆரம்பமாகும் என்றார்கள். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் படத்திலிருந்து நாயகி தீபிகா படுகோனே விலக வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. கடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிக்க ஆறு முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என தீபிகா 'கண்டிஷன்' போட்டுள்ளாராம். அதன் காரணமாகவும் அவர் நடிக்கவிருந்த 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து பேச்சுவார்த்தையுடன் விலகினார். அவருக்கும் அப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் அது தொடர்பாக சண்டை நடந்து அவர் மறைமுகமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டது வரை நடந்தது.
தற்போது 'கல்கி 2' குழுவினரும் தீபிகாவின் ஆறு முதல் எட்டு மணி நேர வேலையை ஏற்க மறுப்பதாகவும், அவருடைய காட்சிகளைக் குறைக்கலாமா அல்லது முழுவதுவமாக நீக்கிவிடலாமா என யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
தீபிகாவின் இந்த குறிப்பிட்ட சில மணி நேர வேலைக்கு பாலிவுட் பிரபலங்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.