ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் |
'பாரத ரத்னா' விருது பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் நினைவாக அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டு இந்த விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பத்மினி கோலாபுரி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு வழங்குவதாக அறிவித்தார்கள்.
இந்த விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடந்தது. இதில் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக் கொண்ட அமிதாப் பச்சன் “கேட்போரின் ஆன்மாவை கரையச் செய்யும் பாடகரின் நினைவாக இந்த விருதைப் பெறுவது அதிர்ஷ்டம்” என்று நெகிழ்ந்து பேசினார்.
“இப்படியொரு பெருமை எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே சந்தோஷம்” என்றார் ரஹ்மான்.