பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா ஹிந்தியை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதே சமயம் கடந்த வருடம் தெலுங்கில் இவர் நான்கு படங்களில் நடித்திருந்தாலும் ஆச்சர்யமாக அந்த நான்கிலுமே பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது, தெலுங்கில் உருவாகி வரும் பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள ஊர்வசி ரவுட்டேலா அங்கே தினசரி ஜிம்முக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படி அவர் செல்லும் ஜிம்மில் தான் நடிகர் ஜூனியர் என்டிஆரும் ஒர்க்-அவுட் செய்து இருக்கிறார். சமீபத்தில் ஜிம்மில் ஜூனியர் என்டிஆரை சந்தித்த ஊர்வசி ரவுட்டேலா அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பு குறித்து அவர் குறிப்பிடும்போது, “குளோபல் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் ஒழுக்கம், நேர்மை, முகத்திற்கு நேராக எதையும் நேரடியாக பேசி விடுவது மற்றும் அவரது எளிமை என அனைத்தையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன். அவருடைய அன்பிற்கும் தூண்டுதலுக்கும் மில்லியன் கணக்கில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் சிங்க இதயத்தை கொண்ட ஒரு மனிதர். உங்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்றும் வாய்ப்புக்காக என்னால் நீண்டநாள் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.