ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் |

2024 பார்லிமென்ட் தேர்தல் இந்தியாவில் ஆறு கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. அதேசமயம் வட மாநிலங்களில் வெவ்வேறு கட்டமாக நடைபெறும் தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தன்னுடைய டீப் பேக் வீடியோவை உருவாக்கி காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது என குற்றம் சாட்டியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான் மும்பை சைபர் கிரைம் போலீசாரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்து இருக்கிறார். மேலும் தேர்தல் தொடர்பான பல அலுவலர்களுக்கும் இதுகுறித்து புகார் அனுப்பியுள்ளார் அமீர்கான்
அமீர்கான் சின்னத்திரையில் பல வருடங்களாக தொகுத்து வழங்கி பிரபலமான ரியாலிட்டி ஷோவான சத்தியமேவ ஜெயதே என்கிற நிகழ்ச்சியில் இருந்து அவர் பேசுகின்ற அரை நிமிட வீடியோ காட்சியை டீப் பேக் முறையில் உருவாக்கி பாஜகவிற்கு எதிராக பிரச்சார உத்தியாக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் அமீர்கான். மேலும் கடந்த 35 வருடங்களில், தேர்தலில் மக்கள் ஓட்டளிப்பது குறித்து தேர்தல் கமிஷனுக்கு உதவும் விதமாக தான் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் எந்த கட்சிக்கும் ஆதரவாக நான் பேசியதும் இல்லை.. வீடியோ வெளியிட்டதும் இல்லை.. இதனை உருவாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.