அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
1990களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை பதிவு செய்த படம் தி காஷ்மீர் பைல்ஸ். இந்த படம் குறித்து தேசிய அளவில் இப்போதும் விவாதம் நடந்து வருகிறது. 15 கோடியில் எடுக்கப்பட்ட படம் 250 கோடி வசூலித்தது. பிரதமர் நரேந்திர மோடி படத்தை பாராட்டினார். பல மாநிலங்கள் படத்திற்கு வரிவிலக்கு அளித்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தொடர்ச்சியாக நாட்டை உலுக்கிய மேலும் 2 சம்பவங்கள் பற்றிய படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இதனையும் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்குகிறார். அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை மையமாகக் கொண்டு வெளியாகவிருக்கும் இரண்டு படங்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.